
IPL 2023 Final: Toss For Chennai Super Kings vs Gujarat Titans Clash Delayed Due To Heavy Rain (Image Source: Google)
ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மழை தொடர்ந்து நீடித்தாலும் இரவு 9.45 மணி வரை ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை மழை நிற்கவில்லை என்றால், ஆட்டம் நாளைக்கு மாற்றப்படும். நாளையும் மழை தொடர்ந்து பெய்தால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
The match can start as late as 9:40 PM IST without being lost!#IPL2023 #IPLFinal #CSK #GT pic.twitter.com/btdVt6HKaf
— CRICKETNMORE (@cricketnmore) May 28, 2023