Advertisement

இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 09, 2023 • 12:38 PM
IPL 2023: Former cricketer Harbhajan Singh's tweet about Chennai's 7-wicket win against Mumbai!
IPL 2023: Former cricketer Harbhajan Singh's tweet about Chennai's 7-wicket win against Mumbai! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாட்னர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending


இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு டீவன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹானே யாருமே எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சிவம் துபே 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுமையாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 40 ரன்களும், அம்பத்தி ராயூடு 20 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், சென்னை அணிக்காக விளையாடிய போதில் இருந்தே, சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றியையும் தமிழில் ட்வீட் போட்டு பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஹர்பஜன் சிங், தற்போதும் சென்னை அணியை தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார். 

 

அவரது பதிவில், "தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான். குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த சென்னை அணிக்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது. ஐபிஎல் தொடரில் இவனை வெல்ல எவன் இங்கு" என்று பதிவிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement