
IPL 2023, GT vs DC Dream11 Team: David Warner or Hardik Pandya? Check Fantasy XI (Image Source: CricketNmore)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் 44ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - நரேந்திர மோடி மைதானம்,அகமதாபாத்
- நேரம் - இரவு 7.30