ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் இன்று இரவு நடக்கும் 23வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் குஜராத் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம, அகமதாபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா என்று அனைத்து அணிகளுக்கும் சவால் அளிக்கும் பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதேபோல் இம்பேக்ட் பிளேயராக விஜய் சங்கரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதேபோல் பந்துவீச்சில் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், மோகித் ஷர்மா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இருப்பினும் குஜராத் அணிக்கு 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், அந்த அணியால் சேஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல. இதனை கடந்த போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவும் சூசகமாக பேசி இருந்தார். இருப்பினும் ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடப்பதால் குஜராத் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதாக இருக்கப் போவதில்லை.
அதேசமயம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், ஜெய்ஷ்வால், தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மையர், ஜுரல் ஆகியோர் அருமையான ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் பந்துவீச்சிற்கு திணறியுள்ளனர். இதனால் இருவரையும் சமாளித்து ஆடினால், ராஜஸ்தான் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது.
பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின், போல்ட், ஹோல்டர், சந்தீப் சர்மா மற்றும் குல்தீப் சென் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு கடந்த சீசனை விடவும் கூடுதல் பலத்துடன் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -03
- குஜராத் டைட்டன்ஸ் - 03
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 00
உத்தேச லெவன்
குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர்
- பேட்டர்ஸ் – ஷுப்மான் கில், ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சாய் சுதர்சன்
- ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின்
- பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில்
கேப்டன்/துணைக்கேப்டன் - ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர், ரஷித் கான், ரவிச்சந்திரன் அஸ்வின்
Win Big, Make Your Cricket Tales Now