Advertisement

தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!

இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு கேப்டனாக நான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

Advertisement
IPL 2023: 'I couldn't get my rhythm', Hardik takes blame for Gujarat Titans' loss
IPL 2023: 'I couldn't get my rhythm', Hardik takes blame for Gujarat Titans' loss (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2023 • 12:22 PM

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 03, 2023 • 12:22 PM

ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கியதுமே டெல்லி அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்குள் 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி பரிதவித்தது. அந்த நேரத்தில் கைகோர்த்த அக்சர் பட்டேல் மற்றும் அமான் கான் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு அணியை காப்பாற்றினார். பின்னர் அச்சர் பட்டேல் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததும் அமான்கான் மற்றும் ரிப்பல் பட்டேல் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை டீசன்ட்டான ரன் குவிப்பை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Trending

இறுதியில் அமான்கான் 51 ரன்கள், ரிப்பல் பட்டேல் 23 ரன்களையும் குவிக்க டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்தது. பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சேஸிங்கில் எப்போதுமே மிகச் சிறப்பாக செயல்படும் குஜராத் அணி பெற்ற இந்து தோல்வி அவர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “இது போன்ற குறைவான இலக்கை எப்பொழுதுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் போட்டியின் துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த பின்னர் நாங்கள் பொறுமையாக விளையாட வேண்டி இருந்தது. ராகுல் திவாதியா அணியை போட்டிக்குள் கொண்டு வந்தாலும் இறுதிவரை விளையாடிய என்னால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

நான் இறுதிவரை போராடியும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. அபினவ் மனோகரும், நானும் மிடில் ஓவர்களில் விளையாடும்போது ரிதத்தை பிடிக்க முடியவில்லை. இடையில் இரண்டு ஓவர்கள் சிறப்பாக அமைந்தால் போட்டியை நிச்சயம் முடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினார்.

திவேத்தியா இறுதி நேரத்தில் போட்டியை எங்களுக்கு சாதகமாக கொண்டு வந்தாலும் கடைசியில் என்னால் இந்த போட்டியை முடித்து கொடுக்க முடியவில்லை. இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு கேப்டனாக நான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement