
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 60ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “நாங்கள் எப்போதும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்போம். டாப் 3 வீரர்கள் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கிறோம். ஆனால் இன்று அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஏன் தோல்வியை தழுவினோம் என்பது குறித்து ஆராய வேண்டும். ஆனால் அதற்கான காரணங்களை என்னால் இப்போது சொல்ல முடியாது.