
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 சீசனில் ஹர்திக் பாண்டியா தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் , முன்னணி வீரராக இருந்தவரை அந்த அணி தக்கவைக்க தவற , அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரை குஜராத் இழுத்து அரவனைத்து கொண்டது .
இதற்கிடையில் இவர் காயங்களுக்கு மத்தியில் பந்துவீச இயலாததால் , இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார், ஆனால் அவர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கினார், அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையை கைப்பற்றினார். அப்போதிலிருந்து, பாண்டியா இந்திய அணியில் ஒரு முக்கிய அம்சமாக மாறினார், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சு தகுதியை படிப்படியாக அதிகரித்து, பல சந்தர்ப்பங்களில் அணியை வழிநடத்தியுள்ளார்.
ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் போது அவரது அமைதியான நடத்தை, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பாண்டியாவை , தோனியுடன் ஒப்பிடுவதற்கு வழிவகுத்தது. இருவர் கீழும் விளையாடியவர்களும் அவ்வாறே கூறி வருகிறார்கள். கடந்த சீசனில் குஜராத் அணிக்காக ஐந்து போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர், சிஎஸ்கே அணியிலும் இரண்டு சீசன்கள் விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது.