
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, லிவிங்ஸ்டன் 82 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 49 அடித்துக்கொடுக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிசன் 75(41) ரன்கள், சூர்யகுமார் யாதவ் 66(31) ரன்கள் விளாசி மிடில் ஆர்டரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, கடைசியில் வந்த திலக் வர்மா(26), டிம் டேவிட்(19) இருவரும் போட்டியை 18.5 ஓவர்கள் பினிஷ் செய்து கொடுத்தனர். அதன்பின், 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
தோல்வியை தழுவிய விரக்தியில் பேட்டி அளித்த ஷிகர் தவான் பேசுகையில், “நாங்கள் அடித்த ஸ்கோர் போதுமானது என்று நினைக்கிறேன். பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை. இன்னும் சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்து வீசியிருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு பந்து வீசியிருக்க வேண்டும்.