Advertisement

எனது முதல் டெஸ்டிலிருந்த பரபரப்பை இப்போட்டி ஏற்படுத்தியது - சௌரவ் கங்குலி!

1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக டெல்லி அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

Advertisement
IPL 2023: It Was Like Winning My First Test, Says Sourav Ganguly After Delhi Capitals Bag First Poin
IPL 2023: It Was Like Winning My First Test, Says Sourav Ganguly After Delhi Capitals Bag First Poin (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 21, 2023 • 05:36 PM

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து இருவது ஓவர்களில் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 127 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்கள், ரஸ்ஸல் 38 ரன்கள் அடித்திருந்தனர். இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், நார்க்கியா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 21, 2023 • 05:36 PM

அதன்பின் 128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி பவர்-பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 61 ரன்கள் அடித்தது. நன்றாக ஆரம்பித்த டெல்லி இந்த இலக்கை விரைவாக எட்டி சிறப்பான ரன்ரேட்டில் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்த்த போது, மிடில் ஆர்டரில் வரிசையாக விக்கெட்டுகள் இழந்தனர். ஓபனிங்கில் நன்றாக விளையாடிக்கொடுத்த டேவிட் வார்னரும் தவறான நேரத்தில் 57 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்து அவரும் இறுதிவரை நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார்.

Trending

அக்ஸர் பட்டேல் சரியான நேரத்தில் பொறுப்பை எடுத்துக்கொண்டு அவசரப்படாமல் ஆட்டத்தை கடைசி ஓவர்வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றுக் கொடுத்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இறுதியாக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இந்நிலையில், எளிதான வெற்றியை போராடி வென்ற டெல்லியை பார்த்து கடுப்பான அதன் இயக்குனர் மற்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இந்த வெற்றி 1996இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் ரன்னை எடுத்த போது ஏற்படுத்திய பரபரப்பை கொடுத்ததாக கலாய்க்கும் வகையில் பாராட்டினார். 

இதுகுறித்து பேசிய அவர், “முதல் வெற்றியை பதிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக 25 வருடங்களுக்கு முன்பாக என்னுடைய முதல் டெஸ்ட் ரன்னை எடுத்த போது இருந்த பரபரப்பை நினைத்துக் கொண்டே பெவிலியினில் அமர்ந்து இந்த போட்டியை பார்த்தேன். இப்போட்டியில் நாங்கள் அதிர்ஷ்டத்தின் பக்கம் இருந்தோம் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் இதற்கு முன்பும் நாங்கள் பந்து வீச்சில் அசத்தலாகவே செயல்பட்டோம். குறிப்பாக பெங்களூருவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது போல மும்பைக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டோம். எனவே எங்களுடைய பவுலிங் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் பிரச்சனை பேட்டிங்கில் தான் இருக்கிறது. எனவே இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு எவ்வாறு நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யலாம் என்பதை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்க்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும் பேட்டிங்கில் நாங்கள் அனுபவமற்ற வீரர்களை கொண்டிருக்கிறோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சிறப்பாக விளையாடவில்லை. பிரிதிவி ஷா, மனிஷ் பாண்டே என யாராக இருந்தாலும் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement