
IPL 2023: Jadeja shares a special message as Dhoni set to add another feather to his cap (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இது 200ஆவது போட்டியில் சிஎஸ்கே-வை கேப்டனாக தோனி வழிநடத்தும் போட்டியாகவும் அமைந்துள்ளது.
கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.
மேலும், 5 முறை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. 2 முறை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. இந்த தருணங்கள் அனைத்திலும் சென்னை அணியை வழிநடத்தியது தோனி தான். 2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.