Advertisement
Advertisement

ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!

பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan May 19, 2023 • 22:38 PM
IPL 2023: Jos Buttler Records Most Ducks In A Season!
IPL 2023: Jos Buttler Records Most Ducks In A Season! (Image Source: Google)

ஜோஸ் பட்லர்-க்கு இந்த வருட ஐபிஎல் தொடர் மறக்க கூடிய ஒன்றாகவே அமைந்திருக்கிறது இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் நான்கு முறை வரை அரை சதம் மற்றும் நான்கு முறை பேக்அவுட் ஆகி இருந்தார் ராஜஸ்தான் ராயல்  அணி 13 போட்டிகளில் விளையாடி, 12 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் அந்த அணி இன்று தங்கள் கடைசி லீக் போட்டியில்  பஞ்சாப் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்தது.  

Trending


இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழக்கம் போல ஜெய் ஸ்வால் மற்றும பட்லர் இருவரும் ஓபனிங் செய்தனர் 188 ரன்கள் இலக்கை துரத்துவதற்கு இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த போட்டியிலும் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆனார். 

இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில ஜோஸ் பட்லர் ஐந்து முறை டக் அவுட் ஆகி படுமோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதாவது ஒரு சீசனில் அதிகபட்சமாக நான்கு முறை டக் அவுட் ஆனதே மோசமான சாதனையாக இருந்தது. இப்போது பட்லர் ஐந்து முறை டெக் அவுட் ஆகி அதில் முன்னணியில் இருக்கிறார்.

 

கடந்த சீசனில் நான்கு அரை சதம் மற்றும் நான்கு சதங்கள் விளாசி மொத்தம் 863 ரன்கள் குறித்த பட்லர் இந்த சீசனில் இதுவரை 392 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் இப்படிக்கு ஓப்பனிங்கில் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து இருந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போவதற்கு இது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement