ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தொடங்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று தனது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக ஆர்சிபி அணி தனது முதல் லீக் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்டது.
இதில் 172 ரன்கள் இலக்கை சேஸ் செய்து 16.2 ஓவர்களில் சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு எந்தவித சிக்கலும் ஆர்சிபி அணிக்கு ஏற்படவில்லை. ஆனாலும் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிலர் காயம் காரணமாக அணியை விட்டு வெளியில் இருக்கின்றன. ராஜத் படித்தார், காயம் காரணமாக மொத்தமாக ஐபிஎல் தொடரை விட்டு விலகியுள்ளார்.
அதேபோல் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஹசரங்கா சர்வதேச போட்டிகளில் இருப்பதால் இன்னும் ஐபிஎல் போட்டிகளுக்கு வரவில்லை. ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசில்வுட் காயம் காரணமாக ஆர்சிபி அணியுடன் இணையவில்லை. இவர்கள் இருவரும் எப்போது ஆர்சிபி அணியுடன் இணைகிறார்கள் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.