
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளுமே பலப்பரிச்சை மேற்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாற்றம் கண்டது. கடைசியில் ரிங்கு சிங், அணியை சரிவிலிருந்து மீட்டு 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசி லக்னோ அணிக்கு பயத்தை உண்டாக்கினார்.
ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் லக்னோ அணி நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்றைய போட்டியில் தோல்வியை தழுவி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் நித்திஷ் ராணா, போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “இன்றைய போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் இதிலிருந்து நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதேபோல நிறைய மாற்றங்கள் மற்றும் சில தவறுகளை சரி செய்துகொள்ள வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக அடுத்த சீசனில் இன்னும் ஆக்ரோஷத்துடன் வருவோம். எங்களது பலவீனத்தை பலமாக்குவோம்.