Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2023 • 14:41 PM
IPL 2023, KKR vs CSK Dream11 Team: Jason Roy or Ruturaj Gaikwad? Check Fantasy XI
IPL 2023, KKR vs CSK Dream11 Team: Jason Roy or Ruturaj Gaikwad? Check Fantasy XI (Image Source: CricketNmore)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில்  எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அண்கள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. தோனி தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரகானே, ஷிவம் துபே ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜடேஜா, மொயின் அலி ஆல்ரவுண்டர்களாக அசத்த, பதிரனா மற்றும் துஷார் பாண்டே ஆகியோர்  வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எளிமையாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் நிதிஷ் ரானா  கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. நிதிஷ் ராணா, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி மற்றும் பெர்கூசன் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருந்தும், அவர்கள் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தாதே கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக உள்ளது. உள்ளூர் போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்ட கொல்கத்தா அணி முனைப்பு காட்டி வருகிறது.

மைதானம் எப்படி?

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்றே சாதகமாக இருந்தாலும், பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே ஈடன் கார்டன் மைதானம் அமைந்துள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • சிஎஸ்கே - 17
  • கேகேஆர் - 09
  • டிரா - 01

உத்தேச லெவன்

கேகேஆர் - ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ரின்கு சிங், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.

சிஎஸ்கே - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கே), மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, ஆகாஷ் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே (கே)
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே, ஜேசன் ராய், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, மகேஷ் திக்ஷனா.

கேப்டன்/துணைக்கேப்டன் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர் 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement