
IPL 2023, KKR vs GT Dream11 Team: Jason Roy vs Shubman Gill; Check Fantasy XI! (Image Source: CricketNmore)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகள் அனைத்தும் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற மும்மரமாக விளையாடி வருகின்றன. இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.
மற்ற 8 அணிகளில் 4 அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
- நேரம் - இரவு 7.30 மணி