ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - ஈடன் கார்டனஸ், கொல்கத்தா
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் (பெங்களூரு மற்றும் குஜராத்துக்கு எதிராக) வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவுக்கு எதிராக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 20 பந்துகளில் அரைசதம் அடித்ததும், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசியதும் கவனத்தை ஈர்த்தது.
இதேபோல் அதிரடியை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகும் கொல்கத்தாவுக்கு சொந்த ஊரில் ஆடுவது கூடுதல் பலமாகும். அத்துடன் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் மிரட்ட காத்திருக்கிறார்கள். மேலும் ரிங்கு சிங், ஜெகதீசன் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன்.
முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் உதை வாங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான மோதலில் எழுச்சி பெற்ற ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
அதே உத்வேகத்துடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. ஆனால் சுழல் தாக்குதலை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ஹைதராபாத்தின் ஸ்கோர் அமையும். முதல் 3 ஆட்டங்களிலும் சொதப்பிய ஹாரி புரூக் இன்றைய ஆட்டத்திலாவது ரன்வேட்டை நடத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 15
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 08
உத்தேச லெவன்ன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரஹ்மானுல்லா குர்பாஸ், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா (கே), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்டர்ஸ் – நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
- பந்துவீச்சாளர்கள் - உம்ரான் மாலிக், வருண் சகரவர்த்தி, மயங்க் மார்கண்டே
கேப்டன்/துணைக்கேப்டன் - சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்.
Win Big, Make Your Cricket Tales Now