
ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டியில் லக்னோ அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்த முடிவுக்காக அவர் இன்று முழுவதும் வருத்தப்படுவார் என்பது உண்மை.
அபிஷேக் சர்மாவுக்கு பதில் துவக்க ஆட்டக்காரராக இடம் பெற்ற விக்கெட் கீப்பர் அன்மோல்பிரீத் சிங் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 41 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அப்துல் சமாத் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
இவர்களைத் தவிர எந்த பேட்ஸ்மேன்களும் மெதுவான லக்னோ ஆடுகளத்தில் நிலைத்து விளையாடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குர்னால் பாண்டியா நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.