
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் தோய்வாக இருப்பதால், இந்த முடிவை எடுத்ததாக தோனி கூறினார். இதனையடுத்து, முதலில் களமிறங்கிய கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாடி பார்டன்ர்ஷிப் அமைக்க மயற்சி செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கான்வே 13 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ரஹானே பொறுப்பாக விளையாடி ரன்கள சேர்த்து வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோயின் அலி 7 ரன்களில் பெவிலியன் திரும்பியது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்த டரில் மோயின் அலி அடித்த அதிகபட்ச ஸ்கோரே வெறும் 23 ரன்கள் தான். இதனிடையே ரஹானே 21 ரன்கள் எடுத்திருந்த போது லலித் யாதவ் அடித்த பந்தை அவர் இறங்கி வந்து அடித்தார். அப்போது தரையோடு ஓட்டி வந்த பந்தை லலித் யாதவ் ஒரே கையில் தாவி பிடித்து கேட்ச் பிடித்தார். இதனால் சிஎஸ்கே அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
THAT. WAS. STUNNING!
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
Relive that sensational catch from @LalitYadav03
Follow the match https://t.co/soUtpXQjCX#TATAIPL | #CSKvDC | @DelhiCapitals pic.twitter.com/z15ZMq1Z6E