
IPL 2023: Lovely cameo by Anuj Rawat as RCB finish with 171/5 (Image Source: Google)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டூ பிளெசிஸுடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல்லும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.