ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் பரபரபாக நடைபெற்று வருகிறது. இதில், வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில் உள்ள ஏக்னாஅ மைதானத்தில் நடைபெறும் 30ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கேப்டன் கேஎல் ராகுல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாவிட்டாலும் கைல் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதோடு, மார்க் வுட், நவின் உல்-ஹக், ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிகளை மிரட்டி வருகின்றனர். இவர்களுடன் தற்போது மார்கஸ் ஸ்டொய்னிஸும் பந்துவீச்சில் கைகொடுத்து வருகிறார். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது லக்னோ அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.
நடப்பு சாம்பியனான குஜராத் அணி சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்றைய லீக் போட்டியில் களமிறங்குகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் சரியான கலவையில் அமைந்துள்ள ஒரு சில அணிகளில் குஜராத்தும் ஒன்று.
சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, முகமது ஷமி, மோஹித் சர்மா மற்றும் ரஷித் கான் ஆகியோர் எதிரணியை திணறடிக்கின்றனர். அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியிடம் குஜராத் அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்ப குஜராத அணி போராடும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 02
- குஜராத் டைட்டன்ஸ் - 02
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 00
உத்தேச லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல் (கே), கைல் மேயர்ஸ், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்னால் பாண்டியா, நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அமித் மிஸ்ரா
குஜராத் டைட்டன்ஸ் - விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, கைல் மேயர்ஸ்
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, அவேஷ் கான், ரஷித் கான்.
கேப்டன்/துணைக்கேப்டன் - கைல் மேயர்ஸ், ஷுப்மன் கில், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ரஷித் கான்
Win Big, Make Your Cricket Tales Now