
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் அக்ஸரிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய மொயீன் அலி வழக்கம் போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முன்ற அஜிங்கியா ரஹானே 21 ரன்களை எடுத்த நிலையில் லலித் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.