
ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியி டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார். இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கேமரூன் க்ரீனும் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.