
ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது.
இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணி நிதிஷ் ரானா, ரிங்கு சிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வியால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது சென்னை. மறுபுறம் கொல்கத்தாவும் முழுமையாக போட்டியிலிருந்து வெளியேறாத நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ரானா, “டாஸ் போடும்போது கூறினேன். இன்றைய தினம் நாங்கள் பேட்டிங் பௌலிங் மற்றும் பேர்ல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சிஎஸ்கே போன்ற அணியை வீழ்த்த முடியும் என்றேன். அதற்கேற்றார் போல இன்று மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.