பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றதற்கான காரணத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது குஜராத். இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சகா இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார்கள்.
ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய சகா 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 43 பந்தில் 81 ரன்கள் எடுத்து வலிமையான துவக்கத்தை தந்தார். சஹா தந்த இந்த வலிமையான துவக்கத்தை மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கில் தொடர்ந்து இருபதாவது ஓவரின் கடைசி பந்து வரை எடுத்துச் சென்றார்.
Trending
இறுதிவரை களத்தில் நின்ற கில் 51 பந்தில் 94 ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் இரண்டு பவுண்டர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து ஏழு சிக்ஸர்களை கில் நொறுக்கினார். இதன் கார்ணமாக இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “இந்த வெற்றிக்கு மேல் நான் என்ன எங்கள் அணி வீரர்களின் இருந்து கேட்க முடியும். ஒரு கட்டத்தில் 88 ரன்கள் இருந்தபோது கைல் மேயர்ஸ் கேட்சை ரஷீத் கான் பிடித்தார். அதுதான் இந்த போட்டியின் மேட்ச் வின்னிங் கேட்ச். ஏனெனில் லக்னோ அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் போட்டி இரு அணிகளுக்குமே சமமாக செல்லும் என்று நினைத்தேன்.
ஆனால் ரஷீத் கான் கேட்ச் பிடித்து மொத்த மேட்ச்சையும் மாற்றிவிட்டார். அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். குர்னால் பாண்டியா உடனான எனது அன்பு மிகவும் உறுதியானது. நாங்கள் இருவரும் இப்படி விளையாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now