
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியின் வெற்றி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நடப்பு தொடரை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான அணியாகவே உள்ளது. அதேசமயம் அந்த அணி இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பதும், சொற்ப இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவவதும் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணியை சாம்கரண் வழி நடத்த தொடங்கிய பிறகு அந்த அணி வலுப்பெற்றுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - பிந்தரா மைதானம், மொஹாலி
- நேரம் - இரவு 7.30 மணி!