
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் மிகச் சிறப்பாக விளையாடி 61 பந்தில் சதம் அடித்து 65 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஏழு விக்கெட் இழப்புக்கு எடுத்த ரன்கள் 167தான். உடன் விளையாடிய யாரும் சரியான ஒத்துழைப்பு தராத பொழுது தனி ஒரு வீரராக நின்று பஞ்சாப் அணியைக் கரை சேர்த்தார் பிரப்சிம்ரன் சிங்!
தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 6.2 ஓவரில் 69 ரன்கள் வந்தும் அடுத்த 67 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பிலிருந்து டெல்லி வெளியேறியது.