
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.
அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் ஐபிஎல்லில் பங்கு பெற பதிவு செய்துள்ளனர். அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து அதிகபட்சமாக 57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பதிவு செய்த வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடி, ரூ. 1.50 கோடி, ரூ. 1 கோடி , ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம் என பட்டியல் நீடிக்கிறது.
அதன்படி இந்த மினி ஏலத்தில் பதிவு செய்த முக்கியமான வீரர்களின் அடிப்படை விலைகளை பற்றி பார்ப்போம். இந்த ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.