ஐபிஎல் 2023: பிளே ஆஃப் அட்டவணை அறிப்பு; சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் பிசிசிஐ பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி பிளேஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் பிளே ஆஃப் அட்டவணை
- மே 23 - தகுதிச் சுற்று 1 - சென்னை.
- மே 24- எலிமினேட்டர் போட்டி - சென்னை.
- மே 26 - தகுதிச் சுற்று 2 - அகமதாபாத்.
- மே 28 - இறுதிப் போட்டி - அகமதாபாத் .
Win Big, Make Your Cricket Tales Now