Advertisement

ஐபிஎல் 2023: பிரப்சிம்ரன் அசத்தல் சதம்; டெல்லிக்கு 168 டார்கெட்!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் சதமடித்து அசத்தினார்.

Advertisement
IPL 2023: Prabhsimran's maiden ton helps PBKS post a total of 167/7 on their 20 overs!
IPL 2023: Prabhsimran's maiden ton helps PBKS post a total of 167/7 on their 20 overs! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2023 • 09:11 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2023 • 09:11 PM

இதில் இன்று நடைபெறும் 59ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Trending

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - பிரப்ஷிம்ரன் சிங் இணை களமிறங்கினர். இதில் தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் என அடுத்தது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்ஷிம்ரன் சிங் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய சாம் கரண் 20 ரன்களிலும், ஹர்ப்ரீத் பிரார் 2  ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத பிரப்ஷிம்ரான் சிங் 61 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 103 ரன்களை எடுத்திருந்த பிரப்ஷிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். 

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement