ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் இன்று இரவு நடைபெறும், 46ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - பிந்தரா மைதானம், மொஹாலி
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கொண்டிருக்கும் பலம், பெளலிங்கில் இல்லாமல் உள்ளது. இந்த சீசனில் மிகவும் மோசமான பெளலிங் செய்த அணியாக மும்பை உள்ளது. இந்த சீசனின் ஸ்பின்னர்கள் தொடர்ந்து சாதித்து வரும் நிலையில், மும்பையின் ஸ்பின்னர்கள் சொல்லிக்கொள்ளும் விதமான பந்து வீச்சை இன்னஇந்த சூழ்நிலையில் பெளலிங்கை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் அணியின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மும்பை அணி பெளலிங்கில் கைகொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான தனது கடைசி போட்டியில் 200 ரன்களுக்கு மேல் வெற்றியை கண்டது. இன்னும் மும்பை அணிக்கு 6 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், ப்ளேஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான வழிகள் பிரகாசமாகவே உள்ளன.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை பேட்டிங், பெளலிங் என இரண்டும் கில்லியாக செயல்படக்கூடிய வீரர்கள் உள்ளார்கள். ஆனால் உள்ளூரில் விளையாடிய கடந்த போட்டியில் லக்னோ எதிராக மோசமான தோல்வியை சந்தித்தார்கள். இருப்பினும் அதிலிருந்து மீண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக தனது கடைசி போட்டியில் வெற்றி வாகை சூடினர்.
ரபாடாவின் வருகை எந்தவொரு தாக்கத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்றாலும், எதிரணிக்கு தலைவலி தரும் பெளலராக இருந்து அவர் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கலாம். அதேபோல் மும்பை அணியிடம் இல்லாத குறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான ஸ்பின் பெளலிங் அட்டாக் பஞ்சாப்பிடம் உள்ளது. ராகுல் சஹார், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் மும்பை பேட்டர்களை ரன்குவிப்பில் இருந்து கட்டுப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள்- 30
- பஞ்சாப் கிங்ஸ் - 15
- மும்பை இந்தியன்ஸ் - 15
உத்தேச லெவன்
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சிக்கந்தர் ராசா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ரிலே மெரிடித், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், பிரப்சிம்ரன் சிங்
- பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் (துணை கேப்டன்), கேமரூன் கிரீன் (கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now