
IPL 2023 - Punjab Kings vs Rajasthan Royals, Preview, Expected XI & Fantasy XI Tips! (Image Source: CricketNmore)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 66ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - ஹி.பி. கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
- நேரம் - இரவு 7.30 மணி