
IPL 2023 - Rajasthan Royals vs Gujarat Titans, Preview, Expected XI & Fantasy XI Tips (Image Source: CricketNmore)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்துக்கு போட்டியிட்டுள்ளது. இதேபோல் 2 அணிகள் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது.
இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - சவாஸ் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - இரவு 7.30 மணி