
IPL 2023: Ravichandran Ashwin shines as he bags two wicket in an over! (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்தது. இதில் அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 77 ரன்களையும், துருவ் ஜுரெல் 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.