
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் தோனி டாஸ் வென்று பவுலிங் எடுத்தார். ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக இம்முறை ஹாரி புரூக் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் களம் இறங்கினர். நல்ல பார்மில் இருந்த ஹாரி புரூக் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் மற்றும் திரிப்பாதி 21 ரன்கள் அடித்து இருவரும் ஜடேஜாவின் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
மயங்க் அகர்வால், உள்ளே வந்தவுடன் இரண்டு ரன்கள் தோனியிடம் ஸ்டம்பிங் அவுட் ஆனார். கடைசியில் க்ளாசன் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் தலா 17 ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எட்டியது ஹைதராபாத் அணி. இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கினார்கள்.
ருத்துராஜ் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுபக்கம் கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்த டெவான் கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் உட்பட 77 ரன்கள் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 138 அடித்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.