ஐபிஎல் 2023: தொடரிலிருந்து முற்றிலுமாக விலகிய ராஜத் படித்தார்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. !
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் பாதி போட்டிகளையும், வெளியூர் மைதானங்களில் மீதி போட்டிகளையும் விளையாட இருப்பதினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோன்று இந்த தொடரில் பல்வேறு முன்னணி வீரர்களும் இடம் பிடித்து விளையாடுவதால் போட்டிக்கு போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பல்வேறு வீரர்களும் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறி வருவது தொடர்கதை ஆகியுள்ளது.
Trending
அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரை தவறவிட்டுள்ள வேளையில் இந்த ஐபிஎல் தொடரானது ஆரம்பித்து இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் பெங்களூரு அணியை சேர்ந்த வீரர் ஒருவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் இம்முறையும் அந்த அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இடம் பிடிக்காத பட்டிதார் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆர்சிபி அணியின் நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ரஜத் பட்டிதார் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் பதிவிட்டுள்ள அந்த கருத்தில், துரதிஷ்டவசமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023-இல் இருந்து ரஜத் பட்டிதார் வெளியேறுகிறார். அவர் மீண்டும் விரைவில் குணமடைந்து களத்திற்கு திரும்ப விரும்புகிறோம்.
அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை அறிவிக்க வேண்டாம் என பயிற்சியாளர்களும், நிர்வாகமும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கியுள்ள பெங்களூரு அணியானது தங்களது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது வெற்றி கணக்கை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now