
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இடம்பெற்று விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, துரதிஷ்டவசமாக தோள்பட்டை பிசகு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்தபோது, இரண்டாவது போட்டியிலும் அவர் இல்லை.
இது குறித்து போட்டியில் நடுவே அப்டேட் கொடுத்த அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கார் கூறுகையில், “குணமடைவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும். அதனால் அவரை சொந்த நாட்டிற்கு அனுப்புகிறோம். வேறு வீரரை தேடி வருகிறோம்.” என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே உறுதியானது.
இந்நிலையில் ரீஸ் டாப்லி, ரஜத் பட்டிடார் ஆகிய இருவருக்கும் மாற்று வீரரை அறிவித்துள்ளது ஆர்சிபி அணி நிர்வாகம். அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் வெய்ன் பர்னல் ரீஸ் டாப்லி-க்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.