
IPL 2023 Retention: Mumbai Indians releases Kieron Pollard ahead of IPL mini auction (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐயும் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றன.
அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.