ஐபிஎல் 2023:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்களுக்கான 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகளுக்கு இடையேயா கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 70ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம் - சின்னசாமி மைதானம், பெங்களுரூ
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 702 ரன்கள் வேட்டையாடி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேவேளையில் விராட் கோலி 538 ரன்கள் சேர்த்து 5ஆவது இடத்தில் இருக்கிறார்.
இவர்கள் இருவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். கிளென் மேக்ஸ்வெல்லும் குஜராத் பந்து வீச்சாளர்களுக்கு சவால்தரக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் மொகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வெய்ன் பார்னலும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.
அதேமயம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 18 புள்ளிகளுடன் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தை பிளே ஆஃப் சுற்றுக்கான பயிற்சி ஆட்டமாக குஜராத் அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 02
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 01
- குஜராத் டைட்டன்ஸ் - 01
உத்தேச லெவன்
ஆர்சிபி:விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், ஷாபாஸ் அகமது, கர்ன் ஷர்மா, முகமது சிராஜ்.
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, தசுன் ஷனகா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), சாய் சுதர்ஷன்
- ஆல்ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரஷித் கான், முகமது சிராஜ்
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now