சஞ்சு சாம்சன் ஒரு குட்டி எம் எஸ் தோனி - கிரேம் ஸ்வான் பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 308 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 154.77 ஆகும். அவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்போடு விளையாடி வருகிறது.
இந்த நிலையில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Trending
இதுகுறித்து பேசிய கிரேம் ஸ்வான், “எனக்கு சஞ்சு சாம்சனிடம் பிடித்தது என்னவென்றால் அவர் நாளுக்கு நாள் தன்னுடைய தலைமைப் பண்பை வளர்த்து வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் மூத்த வீரராகவும் அவர் உருவெடுத்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி சிறப்பாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 6-7 போட்டிகளில் பெரிதாக ரன்கள் எடுக்காமல் பின்னர் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும்.
அவர் கிட்டத்தட்ட ராஜஸ்தான் அணியின் எல்லாமும் என நான் நினைக்கிறேன். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவர் ஒரு குட்டி எம்.எஸ்.தோனி. அவர் அவருடைய கேப்டன்சியினால் பொறுமையை இழக்கவில்லை. அவர் நிதானமாக செயல்படுகிறார். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் ஆட்டங்களை சிறப்பாக கணிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனை ராஜஸ்தான் அணி சிறப்பாக தொடங்கியது. ஆனால், பின்னர் 3 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியினால் புள்ளிப்பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now