
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசஸும், டெல்லி அணியும் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7.30 மணி