Advertisement

ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.

Advertisement
IPL 2023, SRH vs MI Dream11 Team: Aiden Markram or Ishan Kishan? Check Fantasy XI
IPL 2023, SRH vs MI Dream11 Team: Aiden Markram or Ishan Kishan? Check Fantasy XI (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2023 • 10:29 AM

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2023 • 10:29 AM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி அதில் தலா 2 வெற்றி மற்றும் தோல்விகளைச் சந்தித்துள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 228 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதும், அதில் ஹாரி புரூக் சதம் அடித்ததும் ஹைதராபாத் அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது.

கேப்டன் மார்க்ரம், அபிஷேக் ஷர்மாவும் அந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே கைகொடுக்கிறார்கள். அத்துடன் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம், தொடக்க இரு ஆட்டங்களில் பெங்களூரு, சென்னையிடம் உதை வாங்கிய 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அதன் பிறகு டெல்லி, கொல்கத்தா அணிகளை தோற்கடித்தது. இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது. முதல் 3 ஆட்டங்களில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்து ஒரு வழியாக பார்முக்கு திரும்பினார். 

இதே போல் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா, திலக் வர்மாவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா சிக்கனமாக (ஓவருக்கு சராசரி 6.25 ரன்) பந்துவீசி கலக்குகிறார். ஆனால் மற்ற பவுலர்களின் பந்துவீச்சு சீராக இல்லை. எனவே பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். 

கடந்த ஆட்டத்தில் முதல்முறையாக களம் இறங்கிய சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 2 ஓவர் பந்துவீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம் தான். மொத்தத்தில் ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுக்கட்டும் இவ்விரு அணிகளில் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09
  • மும்பை இந்தியன்ஸ் - 10

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்.

மும்பை இந்தியன்ஸ் – இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே) கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, டுவான் ஜான்சன், ரிலே மெரிடித்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹாரி புரூக்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - உம்ரான் மாலிக், பியூஷ் சாவ்லா, மயங்க் மார்கண்டே

கேப்டன்/துணைக்கேப்டன்: ஐடன் மார்க்ராம், இஷான் கிஷன், ஹாரி புரூக், திலக் வர்மா

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement