ஐபிஎல் 2023: மீண்டும் காயமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகர்கள் அதிருப்தி!
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரராகப் பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது ஏப்ரல் மூன்றாம் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலர் காயமடைந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை அணி சார்பாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாகர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியில் ஏற்கனவே முக்கியமான வீரர்கள் சிலர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கும் வேளையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் தோனியும் முழங்காலில் காயம் அடைந்ததாக கூறப்பட்டது.
Trending
அதனால் தோனி நேற்றைய சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தோனி நேற்றைய போட்டியில் அவர் விளையாடி அசத்தினார்.இந்நிலையில் தோனி காயத்திலிருந்து குணமடைந்து விட்டார் என்றும் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் காயமடைந்ததால் அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பென் ஸ்டோக்ஸ்சுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தயாராக இன்னும் ஒரு வாரகாலம் ஓய்வு அளிக்கப்படும். இருந்தாலும் அவர் உடற்பகுதி பெறுவதற்கு கடினமாக உழைத்து வருகிறார். தோனியை பொறுத்தவரை அவர் தனது காயத்தை சரியாக கையாளுகிறார். எனவே அவரது உடற்தகுதி நன்றாக இருக்கிறது. அவர் எப்பொழுது வேண்டுமானாலும் விளையாட தயாராக இருக்கிறார். ஒருவேளை அவரால் முடியவில்லை என்றால் அவரே அணியிலிருந்து விலகுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now