
IPL 2023: Suryakumar Yadav suffers nasty hit above eye while attempting a catch! (Image Source: Google)
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்தார். ஆனால், அதன் பிறகு அவருக்கு போதாத காலமாக மாறிவிட்டது. டெஸ்ட் போட்டியில் விளையாட இடம் கிடைத்தும், அதில் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதே போன்று இந்திய ஒருநாள் அணியிலும் அவர் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து 3 முறை கோல்டன் டக் ஆனார்
ஐபிஎல் தொடரிலாவது சூர்யகுமார் தனது பழைய ஃபார்மை மீட்பார் என்று பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். ஆர்சிபிக்கு எதிராக 15 ரன்களும், சிஎஸ்கேக்கு எதிராக ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் ஃபில்டிங் நின்றார்.