Advertisement
Advertisement
Advertisement

தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது - ஹர்பஜன் சிங் புகழாரம்

தோனியை ஒருவர் அதிக ரன்கள் அடித்திருக்கலாம் அதிக விக்கெட் எடுத்திருக்கலாம் ஆனால் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்க முடியாது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.  

Advertisement
IPL 2023: There Can't Be A Bigger Cricketer In India Than Ms Dhoni, Says Harbhajan Singh
IPL 2023: There Can't Be A Bigger Cricketer In India Than Ms Dhoni, Says Harbhajan Singh (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 21, 2023 • 08:44 PM

இந்திய கிரிக்கெட்டில் சுழற் பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங்குக்கு தனித்த இடம் உண்டு. களத்தில் நல்ல உத்வேகத்துடன் செயல்படுவதோடு புத்திசாலித்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்படக்கூடிய வீரர். கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணிக்காக அவரது பயணம் ஆரம்பித்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் 2017 வரை, நான்கு முறை மும்பை அணி சாம்பியன் ஆன காலக்கட்டத்தில் விளையாடினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 21, 2023 • 08:44 PM

பின்பு 2018 மற்றும் 19ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற இவர் அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். மேலும் இந்திய அணி 2008 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பொழுதும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பொழுதும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் இருந்து முக்கியப் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

Trending

இவர் சமீபத்தில் தனது கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து மனம் திறந்து மிகவும் பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், “மகேந்திர சிங் தோனி ஒருவரே. அவரை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது. அவரைவிட ஒருவர் அதிக ரன்கள் அடித்திருக்கலாம் அதிக விக்கெட் எடுத்திருக்கலாம் ஆனால் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்க முடியாது. 

தோனி இதை ஏற்றுக் கொண்டு மனதிற்குள்ளேயே ரசிகர்களையும் தனது சக வீரர்களையும் மதிக்கிறார். அவர் மிக அன்புடனும் நன்றி உணர்ச்சி உடனும் நடந்து கொள்கிறார். இதெல்லாம் வேறு ஒருவருக்கு நடந்தால் அவர்கள் பைத்தியமாகி விடுவார்கள். ஆனால் தோனி இந்த அன்பையும் உணர்ச்சியையும் 15 ஆண்டுகளாக இதயத்தில் சுமந்துள்ளார். அவர் இன்னும் எதற்காகவும் மாறவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement