Advertisement

பர்ப்பிள் தொப்பியை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - முகமது சிராஜ் நெகிழ்ச்சி !

நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சிளிக்கிறது என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். 

Advertisement
IPL 2023: Took Purple Cap On Bhuvi's Behalf; Realised I Wanted It Too, Recalls Mohammed Siraj
IPL 2023: Took Purple Cap On Bhuvi's Behalf; Realised I Wanted It Too, Recalls Mohammed Siraj (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 21, 2023 • 10:29 PM

நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 21, 2023 • 10:29 PM

அத்துடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்துவீச்சாளருக்கு வழங்க்கப்படும் பர்ப்பிள் நிற தொப்பியையும் கைப்பற்றினார். டூ பிளேசிஸ் 84 ரன்களை எடுத்து, ஆரஞ்சு கேப்பைக்  கைப்பற்றி இருக்கிறார். ஆட்ட நாயகனாக தேர்வாகி, பர்ப்பிள் கேப்பை வென்ற முகமது சிராஜிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending

இந்நிலையில் முகமது சிராஜ் பர்பிள் கேப் தொடர்பாக ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதில்,”2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற  ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் பர்ப்பிள் தொப்பியை வென்றபோது, அவர் சார்பாக  அந்த பர்ப்பிள் தொப்பியை வாங்க நான் சென்றேன். அப்போது நானும் ஒரு நாள் இந்த தொப்பியை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது இந்த பர்ப்பிள் தொப்பியை வென்று அதனை என் கையில் வைத்திருப்பது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.     

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement