Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் கோப்பையை வைத்து சிறப்பு பூஜை நடத்திய சிஎஸ்கே!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஐபிஎல் கோப்பையை தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து சிறப்பு பூஜையை நடத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2023 • 21:23 PM
IPL 2023 Trophy's special Pooja by CSK at Thiyagaraya Nagar Thirupati Temple!
IPL 2023 Trophy's special Pooja by CSK at Thiyagaraya Nagar Thirupati Temple! (Image Source: Google)
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்கள் நடந்துள்ளது. பதினாறாவது ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு சிஎஸ்கேயின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

Trending


இதையடுத்து டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ஜடேஜா வந்து கடைசி ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக டைட்டில் வென்றுள்ளது.

இந்த நிலையில், வெற்றி பெற்ற கையோடு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள், ஐபிஎல் கோப்பையை துணி கொண்டு மறைத்து கொண்டு வந்து, தி நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்துள்ளனர். இந்நிலையில் இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement