
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் ஆட்டமானது நேற்று விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் அற்புதமாக நடைபெற்று முடிந்தது. லோ ஸ்கோரிங் திரில்லராக நடைபெற்ற இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணியானது வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 144 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எளிதாக பெற்று இருக்க வேண்டிய வெற்றியை சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தவறவிட்டனர்.