Advertisement
Advertisement
Advertisement

இவரை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்புதான் - ஸ்டீபன் ஃபிளமிங்! 

 சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார் 

Advertisement
IPL 2023: We Are Still Learning With These New Conditions, Says CSK Head Coach Stephen Fleming
IPL 2023: We Are Still Learning With These New Conditions, Says CSK Head Coach Stephen Fleming (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2023 • 08:43 PM

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 16வது சீசன் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கே கே ஆர் அணிகள் விளையாடின . இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பிக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது இந்த தோல்வியால் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருக்கிறது

Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2023 • 08:43 PM

சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை கட்டுப்படுத்தினர் . நான்கு ஓவர்கள் வீசிய நிறைய 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அம்பட்டி ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தினார் .

Trending

மறுமுனையில் பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி ருத்ராஜ் மற்றும் அஜிங்கரகானே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணிக்கு துவக்கத்திலேயே தடுமாற்றத்தை உருவாக்கினார் . இதனால் சென்னை அணியால் விரைவாக ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

இந்தத் தொடர் முழுவதும் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் . இந்த வருட ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் அவர் . இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார் . ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது சென்னை அணிக்கு இன்னும் மிகப்பெரிய இழப்புதான் என்று தெரிவித்திருக்கிறார். நேற்றைய போட்டிக்கு பின் பேசிய அவர், “சில ஆண்டுகளாக எங்களிடம் நெட் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இருந்தார் . அந்தக் காலகட்டங்களிலேயே சென்னை பேட்ஸ்மேன் களுக்கு அவர் மிகப்பெரிய சவாலாக இருந்தார் . எம் எஸ் தோனியை கூட பல நேரங்களில் ஆட்டம் இழக்க செய்திருக்கிறார் .

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு வீரரை நம் விருப்பத்திற்கு ஏற்ப எடுக்க முடியாது அதற்கென்று ஏலம் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன இதன் காரணமாகத்தான் எங்களால் அவரை எடுக்க முடியவில்லை . இது இன்று வரை எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் ”என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement