
ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற 47ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தாலும் நித்திஷ் ராணா 42 ரன்களையும், ரிங்கு சிங் 46 ஆகியோரது அற்புதமான பாட்னர்ஷிப் காரணமாக ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.
அதோடு பின் வரிசையில் ரஸல் 24 மற்றும் அனுகுல் ராய் 13 ஆகியோரும் கைகொடுக்க கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் (41) மற்றும் கிளாசன் (36) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நல்ல நிலையை ஈட்டியது.