
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காகிசோ ரபாடா விசீய முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.
ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அதனை சரியாக கணிக்க தவறி சக வீரர்களிடம் அவுட் இல்லை என தெரிவிக்க பஞ்சாப் அணி வீரர்களும் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர ஆரம்பத்தினர். ஆனால் அந்த ஓவரின் இறுதியின் போது பெரிய திரையில் பந்து டிராவிஸ் ஹெட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரியவந்தது. இதனை கண்ட பஞ்சாப் அணி வீரர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.